மன நிம்மதி வேண்டுமா? “மயில் கொண்டை பூ பார்த்தால் விட்டுவிடாதீர்கள்” மருத்துவ குணம் கொண்ட மரம்..!!

0
204
#image_title

Ponvandu maram: நம்மில் பலருக்கும் சில வகையான செடி, கொடி, மரங்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. நாம் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லும் பல வகையான மரங்களின் மருத்துவ பயன்கள் அதிகம். பல ஆயிரம் கணக்கில் சிகிச்சை பெற்றுவந்தாலும் ஒருசில நாேய்கள் குணமடைவதில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகளும் மாறிக்கொண்டதால் நோய்களும் புதிது புதிதாக உருவாகிகொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் நம்மை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடி, மரங்களில் இயற்கையாகவே சில நோய்களை குணப்படுத்தும் மருத்து குணங்கள் உள்ளது. நம் நோய்களுக்கான சிகிச்சை வேண்டுமானால் மாறிக்கொண்டு இருக்கலாம். ஆனால் மரங்களின் மருத்துவ குணங்கள் அப்படியே தான் இருக்கும். அந்தவகையில் தற்போது அழிந்து வரும் மரங்களில் ஒன்றாக இருக்க கூடிய செங்கொன்றை மரத்தை பற்றி (sarakondrai tree in tamil) பார்க்கலாம்.

செங்கொன்றை மரம்

இந்த மரத்தை செங்கொன்றை என்றும் சரக்கொன்றை எனவும் கூறுவார்கள். இந்த மரங்ளில் பலவகைகள் உள்ளன. இந்த மரத்தை கிராமப்புறங்களில் கொன்ன மரம் என்று கூறுவார்கள். இன்னும் தெரியும்படியாக சொல்லப்போனால் பொன்வண்டு மரம் என கூறினால் அனைவருக்கும் தெரியும்.

கிராமப்புறங்களில் அதிக அளவு காணப்பட்ட இந்த மரங்கள் தற்போது எங்கும் காணப்படுவதில்லை. பொன்வண்டு இந்த மரத்தின் இலைகளை தான் உணவாக உட்கொள்ளும். சிறுவயதில் பொன்வண்டு பிடிக்க செல்பவர்கள் இந்த மரத்தை தேடி அலைந்தது எல்லாம் நினைவுகள் தான். மேலும் இந்த மரத்தில் ஆவணி மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை அதிக அளவில் பூக்கள் பூக்கும். பார்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

இதன் காய் முருங்கை காய் போன்று நீளமாகவும், காய்ந்து போய்விட்டால் கருப்பாகவும் இருக்கும்.

செங்கொன்றை மரம் மருத்துவ பயன்கள்

செங்கொன்றை பூக்களை குளிக்கும் நீரில் போட்டு குளித்து வர தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும்.

மேலும் இந்த பூக்களை கசாயம் வைத்து குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும்.

இந்த பூக்களை ரசம் வைத்து சாப்பிடலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

இந்த இலைகளை பறித்து கசாயம் வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சிவபெருமானுக்கு உகந்த பூவாக இந்த பூக்கள் பார்க்கப்படுகிறது. எனவே இந்த மரம் உள்ள இடங்களில் நமக்கு நேர்மறையான ஆற்றல் கிடைக்கும். மன அழுத்தத்தில் உள்ளவர்கள் இந்த மரத்தின் அடியில் அமர்ந்து இதன் காற்றை சுவாத்தால் மனநிம்மதி கிடைக்கும்.

மேலும் படிக்க: இந்த செடியை பார்த்துள்ளீர்களா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. பல மருத்துவ பலன்களை கொண்ட பழம்..!!