மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா

0
122

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டியை பெற்றுள்ளது

ஆனால் எந்த கட்சிக்கு முதல்வர் பதவி என்பதில் நடந்து வரும் அதிகார போட்டி காரணமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் அம்மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது

இந்த நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இணைந்து அமைக்கும் ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறின

இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க சோனியா காந்தியை சரத்பவார் சந்திக்கவிருப்பதாகவும் சோனியா காந்தி இதற்கு சம்மதித்தால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஹுசைன் தல்வாய் என்பவர், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘பல சந்தர்ப்பங்களில் காங்கிரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளதாகவும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பாஜக ஆட்சி அமையாமல் இருப்பதை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்