Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்தார் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து!! சண்டை கலைஞர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்!! 

Sardaar 2 shooting site accident!! Shooting stopped due to the death of the martial artist!!

Sardaar 2 shooting site accident!! Shooting stopped due to the death of the martial artist!!

சர்தார் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து!! சண்டை கலைஞர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்!!
நடிகர் கார்த்தி அவர்கள் நடித்து வரும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது நிகழ்ந்த விபத்து ஒன்றில் நடனக் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பிளஸ் மித்ரன் கூட்டணியில் உருவான சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
பின்னர் சில தினங்களுக்கு முன்னர் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர்கள் கார்த்தி, எஸ்ஜே சூர்யா இருவரும் கலந்து கொண்டு நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று(ஜூலை17) படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சண்டைக் கலைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
சண்டைக் காட்சி படமாக்கும் பொழுது சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் சண்டை கலைஞர் ஏழுமலை அவர்களுக்கு மார்புப் பகுதியில் அடிபட்டது.
சண்டை கலைஞர் ஏழுமலை அவர்களுக்கு மார்புப் பகுதியில் அடிபட்டதால் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி சண்டை கலைஞர் ஏழுமலை உயிரிழந்தார். இதையடுத்து சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
Exit mobile version