Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்தார் மாஸ் வெற்றி! கார்த்தியின் வியக்க வைக்கும் பரிசு!!

Sardar Mass Success! Karti's Amazing Gift!!

Sardar Mass Success! Karti's Amazing Gift!!

சர்தார் மாஸ் வெற்றி! கார்த்தியின் வியக்க வைக்கும் பரிசு!!

நடிகர் கார்த்தி தனது சர்தார் படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வித்தியாசமான பரிசு அளித்துள்ளார். இந்த வருடம் நடிகர் கார்த்திக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருந்து வருகிறது.இந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன்,சர்தார், என மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர்   வெற்றியை பெற்றுள்ளன. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் கார்த்தி.

பொன்னியின் செல்வனில் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை.விருமனும், சர்தார் –உம் அவர் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள். இதில் தீபாவளி அன்று வெளியான சர்தார் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி அப்பா,மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.

மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடி நீரின் தீமைகளை வலியுறுத்துவதாக இந்த படம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவினை முன்னிட்டு கார்த்தி படக்குழுவினர் அனைவருக்கும் ஆச்சர்யப்படும் வகையில் பரிசு வழங்கியுள்ளார்..படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் வாட்டர் பாட்டில் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.இந்த பாட்டில் சுமார் 30000 மதிப்பிலான வெள்ளியால் ஆன பாட்டிலாகும்.

Exit mobile version