Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்!

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்!

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் தோல்வி அடையவில்லை.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் பிரின்ஸ் படத்தைவிட கம்மியான எதிர்பார்ப்புடன் ரிலீஸான சர்தார் திரைப்படம் வசூலில் முந்தியுள்ளது.

சர்தார் திரைப்படமும் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் பிரின்ஸ் திரைப்படத்தை ஒப்பிடும் போது படம் சுமார் ரகம் என்று ரசிகர்களின் கருத்துகள் எழுந்துள்லன. படத்தில் சொல்லப்பட்டுள்ள நல்ல கருத்து காரணமாக பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தீபாவளி ரிலீஸ் படத்தில் சர்தார் படம்தான் முன்னணியில் உள்ளது. இந்த படம் வெளியாகி நான்கு நாட்களில் இதுவரை உலகம் முழுவதும் 42 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். விரைவில் இந்த படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என கருதப்படுகிறது.

இந்த ஆண்டில் ஏற்கனவே விருமன் மற்றும் பொன்னியின் செலவ்ன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்த கார்த்தி மூன்றாவது ஹாட்ரிக் ஹிட்டாக சர்தார் படத்தைக் கொடுத்துள்ளார். பிரின்ஸ் படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு திரைகள் அதிகமாகியுள்ளன.

Exit mobile version