Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காலசர்ப்ப யோகம் மற்றும் தோஷத்தின் பொதுவான தன்மைகள்!

இவ்வுலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதோடு இதில் பல கோடி நபர்களுக்கு கால சர்ப்ப சர்ப்ப தோஷ பாதிப்பு இருக்கிறது.

இதில் பலர் சர்பத்தை நேரில் பார்த்திருக்க கூட மாட்டார்கள். அதன் பிறகு ஏன் சர்ப்ப தோஷம் உண்டானது என்பதை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவைதான் கர்மவினைகள் என்று சொல்லப்படுகிறது, அவருடைய செயல்பாடுகளால் கீழ்வரும் காரணங்கள் காரணமாக மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப கால, சர்ப்ப தோஷம் உண்டாகிறது.

ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழி வழியாக தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகமாக கருதப்படுகிறது.

ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், காட்டும் கிரகமாக திகழ்ந்து வருகின்றன.

தோஷம் என்பது பரம்பரை, பரம்பரையாக, தொடர்ந்து வரும் ஜாதகருக்கு பூமி வாங்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களின் மீது பழி சுமத்தி தப்பித்து விடுவார்கள், குற்றவுணர்வு குறைவாக இருக்கும். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள் நம்பியவர்களை சார்ந்தே வாழ்வார்கள்.

எப்போதும் மனதில் ஏதாவது ஒரு குழப்பம், அல்லது பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அவரும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள்.

ஜீரணக்கோளாறு அதிகமாக இருக்கும், எந்த முடிவையும் உடனடியாக மேற்கொள்ள மாட்டார்கள். அல்லது முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் கூண்டுக் கிளியாக வீட்டில் அடைபட்டிருப்பதை விருப்பம் கொண்டிருப்பார்கள்.

Exit mobile version