Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் அதிமுகவில் நுழைகிறார் சசிகலா? செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுந்த ஆதரவு குரல்கள்

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக ஒரு பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது அந்த அளவிற்கு சட்டசபை உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது அதிமுக.

எதிர்க்கட்சித் தலைவராக செயல்படக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி என்னதான் சாதுரியமான நபர் தான் என்றாலும் கூட ஆளும் தரப்பினரின் சில உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அவர் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவேதான் தான் ஆளும்தரப்பு என்ன செய்தாலும் ஏதோ ஒப்புக்கு ஏதாவது ஒரு குறை சொல்லி விட்டு பெரிய அளவில் ஆளும் கட்சியை விமர்சனம் செய்யாமல் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒதுங்கியே இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய பேச்சு தற்சமயம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி பெரியகுளத்திலுள்ள ஓபிஎஸ் அவர்களின் பண்ணை வீட்டில் அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் டிடிவி தினகரன், சசிகலா, உள்ளிட்டோர் இணைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து உரையாற்றிய தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தோம். அதிமுக தோற்றதற்கு காரணம் நாம் பிரிந்து இருந்ததால் தான் என்று பலரும் தெரிவித்தார்கள் என கூறியிருக்கிறார்.

ஆகவே இதுபோன்ற தவறு மறுபடியும் நடந்து விடக்கூடாது என்பதால் தான் நம்முடைய கட்சி ஒன்றாக இணைய வேண்டும் அதிமுக என்ற கட்சி ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்து ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களிடம் கொடுத்திருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் பேசிய அவர் எங்களுடைய விருப்பத்தை அவரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவருடைய கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version