Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிஸ்ஸஸ் சசிகலா யுவர் அண்டர் அரஸ்ட்! தமிழகத்திற்குள் கால் வைத்தவுடனேயே தட்டித்தூக்க ஏற்பாடு!

பெங்களூரில் இருந்து சென்னை வரும் சசிகலாவை சேலத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆளும் தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நான்கு வருடங்களாக சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவருக்கு சிறையிலிருந்த பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அந்த மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்போது பெங்களூரிலேயே தங்கியிருக்கிறார்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் தன்னுடைய தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைத்துக் கொள்வது தொடர்பாக நாங்கள் பரிசீலனை செய்வோம் என்று அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட பின்னர் ஆத்திரமுற்ற அமைச்சர் ஜெயக்குமார் நம்முடைய சின்னத்தை முடக்க நினைக்கும் அவருடன் எவ்வாறு கைகோர்க்க இயலும் என்று கேள்வி எழுப்பியதோடு, அதிமுகவின் கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதோடு டிடிவி தினகரன் தொடர்பாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்தது அவருடைய சொந்தக் கருத்து என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஒரு கட்சியில் இரு தலைவர்களுடைய வெவ்வேறு பதில் காரணமாக, தொண்டர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அதிமுகவின் கொடியை உபயோகப்படுத்தி இருக்கிற சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டமான சேலத்தில் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதிமுகவின் கொடியை சசிகலா உபயோகப்படுத்தியது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் அவர்கள் இரண்டு பேருமே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமான ஆதரவாளர்கள். இதன் காரணமாக தான் அவர்களை வைத்து எடப்பாடி தன்னுடைய அரசியல் சித்து விளையாடடை தொடங்கி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் சசிகலாவை சேலத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆளும் கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

சசிகலா சாலை வழியாக தமிழகம் வந்தால் கைது செய்வது உறுதி என்பதை தெரிவிக்கும் விதமாக, எதற்கும் நான் தயார் என்பதை தெரிவிக்கும் விதமாகவும் யாரையும் நம்பாமல் தன்னுடைய சொந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மனு கொடுத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. முதல்வர் ஆளுமையின் கீழ் தான் காவல்துறை தற்சமயம் இருந்து வருகிறது என்ற காரணத்தாலும் ,அவர்கள் கண் அசைத்தால் போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சசிகலாவின் சென்னை வருகையின் போது தமிழக அரசியலில் மிகப் பெரிய புயல் கிளம்பும் என்று தெரிகிறது.

Exit mobile version