Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆடியோ லீக்கான விவகாரம்! விளக்கம் அளித்த அதிமுக!

அதிமுகவின் ஒரே ஒரு தொண்டர் கூட சசிகலாவிடம் உரையாற்றவில்லை அதிமுகவை சார்ந்தவர்களிடம் சசிகலா தான் பேசி வருகின்றார். சசிகலாவிடம் உரையாற்றியதாக சொல்லப்படும் நபர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அதிமுகவின் முனுசாமி.

சசிகலாவின் எந்த ஒரு எண்ணமும் இங்கே ஈடாகப்போவதில்லை சசிகலாவின் பேச்சுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் இசை அளிக்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி வேப்பனஹள்ளியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

நான் மீண்டும் கட்சிக்கு வருகை தருவேன் கண்டிப்பாக கட்சியை சரிசெய்துவிடலாம் நோய்த்தொற்று முடிவடைந்ததும் நான் வந்து விடுவேன் என்று சசிகலா உரையாற்றிய ஆடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி அதிமுகவில் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது.

அந்த ஆடியோவில் சசிகலாவுடன் உரையாற்றிய அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் எனவும், நேற்று தகவல் கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் கிராமத்தைச் சார்ந்த அதிமுகவின் ஐடி விங் அமைப்பாளர் வினோத் எனவும், இவரிடம்தான் சசிகலா உரையாற்றியிருக்கிறார். அதற்கான ஆடியோ தான் தற்சமயம் வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனவும். தகவல் கிடைத்தது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐடியில் இருந்தாலும் கூட கட்சியின் நிலவரம் தொடர்பாக சசிகலாவிற்கு கடிதம் எழுதுவேன் அவர் பதில் கடிதம் அனுப்புவார் திடீரென அவர் போன் செய்து என்னிடம் உரையாற்றினார். நோய்த்தொற்று முடிவுக்கு வந்த பிறகு அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவேன் என்று தெரிவித்ததாக அவர் கூறியிருக்கிறார். அதோடு சசிகலா விடுதலையான சமயத்தில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து ஒட்டியதற்கே என் மீது கட்சியின் தலைமை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவ்வாறு இருக்கையில் தற்போது நான் சசிகலாவிடம் உரையாற்றியது தொடர்பாகவும், என் மீது கட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது என்று உறுதியுடன் தெரிவித்திருக்கிறார் வினோத்.

ஆனாலும் அதனை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அறவே மறுத்திருக்கிறார். இதன்மூலம் வினோத் அதிமுகவில் சார்ந்தவரா? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவரா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.

Exit mobile version