அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.?எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மரியாதை.!!

0
157

இன்று அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அதிமுகவின் பொன்விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அங்கு அவர் அதிமுக கொடியையும் ஏற்றி வைத்துள்ளார். அவருக்கு அங்கு மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பொன்விழா ஆண்டு கொடியேற்று நிகழ்வை ஒட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்துள்ளார். நேற்று இவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது