Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேவர் சிலைக்கு சோகத்துடன் மாலை அணிவித்த சசிகலா!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி விழா மற்றும் 53 ஆவது குருபூஜை விழா நாளைய தினம் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கக்கூடிய முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சி நேற்றைய தினம் ஆரம்பமானது.

இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கக்கூடிய முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார் . கோரிப்பாளையம் தேவர் சிலை தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்தார் அதற்காக தேர்தல் பிரச்சார வாகனத்தில் சசிகலா வருகை தந்தார். இது ஜெயலலிதா பயன்படுத்திய வாகனம் என்று சொல்ல படுகிறது அதிமுக கட்சியின் கொடி பொருத்தப்பட்டு இருந்தது .

கோரிப்பாளையத்திக்கு வருகை தந்த போது சசிகலாவின் வாகனம் செல்லூர் வழியாக தேவர் சிலைக்கு வந்தது அங்கே செல்லூர் ராஜுவின் வீடு இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சசிகலா பச்சை நிற புடவையை அணிந்து வந்திருந்தார். அவர் வந்திருந்த தோற்றத்தில் அவரை பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக காணப்பட்டார், ஆனாலும் சசிகலா படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிச் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருந்தார்.

தெப்பகுளம் மருதுபாண்டியர் சிலைக்கு சசிகலா வந்த சமயத்தில் 4 முனை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது சூடம் ஏற்றி கற்பூர ஆரத்தி வழிபாடு நடத்தினார்கள். கோரிப்பாளையம், மதுரை தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏராளமானோர் சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள்.

Exit mobile version