சசிகலாவிற்கு என்ன ஆனது? மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட்!

0
110

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் நிலையில் ,அவர் இன்னும் ஏழு தினங்களில் தண்டனை காலம் முடிந்து விடுதலையாக இருக்கிறார் .இந்த நிலையில், சென்ற 19 ஆம் தேதி அன்று அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இருக்கக்கூடிய போரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்பொழுது வரை அவர் அந்த மருத்துவமனையில்தான் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு நோய், அதோடு தைராய்டு, போன்ற உடல் உபாதைகள் கொண்டிருக்கும் சசிகலா காய்ச்சல், மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், மருத்துவமனைக்கு வந்தவுடன் அரை காற்றில் ஆக்சிசன் என்பது 79% அதோடு காய்ச்சலும் இருந்து வருகிறது. ஆக்சிசன் ஆண்டிபயோடிக் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று மருத்துவமனையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அந்த மருத்துவமனையின் இயக்குனர் ஹச் .வி மனோஜ் சசிகலாவிற்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவருக்கு சர்க்கரை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால், அதற்கு ஏற்ற சிகிச்சையை கொடுத்திருக்கிறோம் மூச்சுத் திணறலும் இருந்தது. அதன் காரணமாக, அவருக்கு ஆக்சிசன் கொடுக்கப்பட்ட பின்னர் உடல்நிலை சற்று தேறி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.