மாநில உளவுத்துறையினர் இடையே சசிகலா வீட்டில் இருக்கின்றாரா அல்லது வெளியே சென்று விட்டாரா இன்று குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சென்னைக்கு வந்த சசிகலா சென்ற ஒரு வார காலமாகவே டிநகரில் அவருடைய வீட்டில் சத்தமில்லாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நண்பர்கள் மூலம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று சொல்லப்பட்டது. அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழக பாதையில் பயணம் மேற்கொள்ளவும் ஆலோசனைகள் செய்து வருகிறார் என்று சொல்லப்பட்டது.
மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு போய் தரிசனம் செய்துவிட்டு மக்களை சந்திக்கவும் அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிகிறது. அதேபோல ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல ஜெயலலிதா பயன்படுத்திய டொயோட்டா காரை மதுரைக்கு முன்கூட்டியே அனுப்பி வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மதுரைக்கு விமானம் மூலமாக போகத் திட்டமிட்டு இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது ஆனாலும் கடந்த இரு தினங்களாக அவர் சத்தமே இல்லாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரும், கர்நாடக பதிவு எண்ணைக் கொண்ட ஒரு காரும், சசிகலா வீட்டிற்கு வந்து போயிருக்கின்றன ஆகையால் தற்சமயம் சசிகலா வீட்டில் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று உளவுத்துறையினர் பதற்றத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.