மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று கடுமையாக தற்போது வரையில் முயற்சித்து வருகிறார். ஆனால் அவருடைய முயற்சிக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.
ஆகவே சசிகலா புதிதாக ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார், அதாவது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களை சந்தித்து அவர்களுடைய மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர் திட்டம் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் மிக விரைவில் அதிமுக அதன் வசம் வந்துவிடும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த விதத்தில் சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் அவர் கடந்த 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.
அதன் பிறகு மாலை சமயத்தில் சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று அவர் வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. அப்போது இளவரசி, அவருடைய மகன் விவேக் உள்ளிட்டோர் உடன் இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன்னதாக திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையம் எதிரிலிருக்கின்ற விடுதியில் சசிகலா தங்கினார் அப்போது அதே விடுதிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் தம்பி ராஜாவும் வருகை தந்தார்.
அவர் சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே இருக்கின்ற அறையில் தங்கினார். அதன் பிறகு தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்து செல்கிறார். பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்து விட்டு கோவிலுக்கு புறப்பட்டு சென்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணமானது என்னதான் சசிகலாவை பொருத்தவரையில் தன்னுடைய தனிமனித ஆன்மீகப் பயணமாக வெளி காட்டப்பட்டாலும் கூட இதிலும்கூட அரசியல் இருக்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், தற்சமயம் சசிகலா 2வது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்று இருக்கிறார் ஆகவே சாலை மூலமாக திட்டமிட்டுள்ள பயணத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், தன்னுடைய ஆதரவாளர்களையும் அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.