தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை முன்னிட்டு அந்த கட்சி இரு தலைவர்களுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலா காய் நகர்த்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.சட்டசபை உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்லப்படுகிறது. தலைமையும் மோதல், முன்னாள் தலைவர்களுக்கு பாதுகாப்பு இன்றி இருப்பது என பல காரணங்கள் இருந்து வருவதால் அதனை பயன்படுத்திக் கொண்டு கட்சிக்குள் மீண்டும் வருவதற்கு தன்னுடைய வேலைகளை சசிகலா தரப்பு ஆரம்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியில் இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நோய் தொற்று காரணமாக, சசிகலா வெளியே தலைகாட்டாமல் இருந்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அவர் காய்நகர்த்தல்களை சரியாக செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நான்தான் கட்சியை காப்பாற்ற இயலும் நான்தான் மோதலையும் சரிசெய்ய இயலும் என்று சசிகலா இப்போது தூது அனுப்ப தொடங்கிவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.