சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!!

0
882
Sasikala OPS TTV is again linked with AIADMK.

சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!!

எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின விழாவை அடுத்து அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் இதனை ரத்து செய்துவிட்டு அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் பல திட்டங்கள் இருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். குறிப்பாக திமுக மக்களவைத் தேர்தலின் போது ஒருங்கிணைப்பு குழு அமைத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி அது குறித்த நடவடிக்கைகளும் தற்போதையிலிருந்து ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதிமுக ஒவ்வொரு முறை கூட்டம் வைக்கும்பொழுதும் வெற்றி பெறாதது குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மாஜி அமைச்சர்கள் கூறினர். கட்சி தொய்வுற்று இயங்குவதாக அதிருப்தியில் இருந்தனர். இதனை மாற்றியமைக்கும் பொருட்டு தற்பொழுது செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் அனைவருக்கும் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக டிடிவி தினகரன் சசிகலா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இணைவது குறித்து எந்த ஒரு பேச்சும் எடுக்கக் கூடாது என கூறியுள்ளாராம். இது குறித்து அனைத்து மாவட்டத்திலுள்ள  அறிவுரை கூறும் படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட செயலாளர்களும் இவர்களை கட்டுப்படுத்தினாலும் அதன் கீழ் இருக்கும் நிர்வாகிகள் கேட்கத்தான் செய்வார்கள் அதனை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்களாம்.

இது குறித்து கட்டாயம் கூட்டத்தில் பேச்சுவார்த்தை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு வருடமும் செயற்குழு கூட்டமானது  ஒவ்வொரு கட்சியிலும் நடைபெற வேண்டுமென்பது தேர்தல் விதி. இதனை பிரித்து மாவட்ட செயலாளர்களுடன் கூட்டத்தை நடத்துவதற்கு செயற்குழு கூட்டமே ஒன்றாக நடத்தி விடலாம் என்பதால் உடனடியாக இதனை அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டத்தில் திமுக பக்கம் உள்ள சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து பேசப்படும் என்றும் அதற்குரிய கண்டனங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு எதிரான கண்டன தீர்மானங்கள் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் திமுக, எம் மாதிரியான திட்டங்களை தீட்டி சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது அதற்கு எதிராக நாம் எதனை கையாள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்ய இந்த செயற்குழு கூட்டம் இருக்குமென கூறுகின்றனர்.