சசிகலாவின் மூச்சுத்திணறல்! டெல்லி வரை சென்ற டிடிவி தினகரன்!

0
135

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வரும் சசிகலா நேற்றைய தினம் மாலை சிறைக்கு அருகே இருக்கின்ற மருத்துவ ஆராய்ச்சி நிலையமான போரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு முதலே சசிகலாவின் உடல் நலம் தொடர்பாக ஊடகங்கள், மற்றும் தொலைக்காட்சிகளில், பல தகவல்கள் உலாவிக் கொண்டிருந்தன. அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவசர அவசரமாக பெங்களூரு கிளம்பிச் சென்றார்கள்.

திவாகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், தினகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மருத்துவர் வெங்கடேசன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், என மூன்று பிரிவுகளாக பெங்களூரில் முகாமிட்டு இருக்கிறார்கள். சசிகலாவின் உடல் நலம் தொடர்பாக சசிகலாவை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிப்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

சென்ற ஒரு வார காலமாகவே சுற்றுலாவுக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்திருக்கிறது. உடலில் இருக்கின்ற சர்க்கரையின் அளவிலும் தொந்தரவு இருந்திருக்கிறது. சிறையின் மருத்துவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், நேற்றைய தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சசிகலாவின் வழக்கறிஞர் ஆன செந்தூர் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்து விட்டு மாலை நான்கு முப்பது மணி அளவில் சிறை வளாகத்திற்கு அருகில் இருக்கின்ற பவுரிங் மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

சசிகலா மருத்துவமனையில் சேர்க்கப்படும் சமயத்தில் அவருடைய உடலில் ஆக்சிசன் 79 சதவீதமாக இருந்திருக்கின்றது. ஆகவே மருத்துவமனை சார்பாக சசிகலாவிற்கு தேவைப்படும் ஆக்சிசன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மெதுவாக அவருடைய உடலில் இருக்கக்கூடிய ஆக்சிசன் அளவானது சுமார் 92 வரை வந்திருக்கிறது இதனை தொடர்ந்து ஆக்சிசன் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். பயப்படுவதற்கு எந்த ஒரு விஷயமும் இல்லை என்று சசிகலாவிடம் தெரிவித்த மருத்துவர்கள் அவரை நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதோடு அவர் சாதாரண வார்டில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு மருத்துவமனைக்கு விரைந்த திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் சசிகலாவை பார்த்தே தீர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்துடன் பிரச்சனையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரை பார்ப்பதற்கு அனுமதித்திருக்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

இதனையடுத்து நேற்று இரவே பெங்களூரு புறப்பட்ட டிடிவி தினகரன் இன்று காலை சசிகலாவை சந்திப்பதற்கு மருத்துவமனைக்கு போய் இருக்கின்றார். அவருக்கு கிடைத்த தகவலின்படி சசிகலா நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்தார். ஆனாலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் சசிகலாவிற்கு சிறையில் இருந்த சமயத்தில் போதுமான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

சசிகலாவின் சுவாசம் சீராக இருக்கிறது என்ற ஒரு பயமும் தேவையில்லை ஆனாலும் அவருடைய குடும்பத்தார் ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவரை பார்த்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள். சசிகலா விடுதலை ஆவதற்கு இன்னும் ஏழு தினங்கள் இருக்கின்ற நிலையில் தனியார் மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்து உடல் நலம் சரியான பின்னர் 27-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ சிறைக்கு போய் உடனடியாக வெளியே வந்து விடலாம் என்பதே அவர்களுடைய திட்டமாக இருக்கிறது. மறுபடியும் சசிகலாவை ஏழு தினங்கள் சிறைக்குள் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் வசதி இருக்காது என்ற காரணத்தால் தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

ஆனாலும் மருத்துவர்கள் சசிகலாவிற்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. இரண்டு முறையும் தொற்று இல்லை என்றுதான் வந்திருக்கிறது. அவருக்கு பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆகவே இன்று மாலையே அவரை மறுபடியும் சிறைக்கு அனுப்பி விடலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார்களாம். இதனை தெரிந்து கொண்ட டிடிவி தினகரன் மறுபடியும் சசிகலாவை சிறைக்கு போக விடாமல் தனியார் மருத்துவமனையில் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க உதவி புரியுமாறு டெல்லி வரை பேசி வருகின்றார் என்று தெரிவிக்கிறார்கள்.