மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை!
சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது.அதற்கடுத்து சசிகலா சில காலம் மௌனம் காத்திருந்தார்.அதற்கடுத்து ஜெயலலிதா அவர்களின் பிறந்தால் பிறகு ஓர் நாள் இரவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியது,நான் கட்சியிலிருந்து விலகுகிறேன்,நாம் அனைவரும் திமுக என்னும் தீய சக்தியை வரவிடாமல் தடுக்க அயராது பாடு பட வேண்டும் என்று கூறினார்.அதுமட்டுமின்றி நான் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.என இவ்வாறு அவர் அறிவித்தது அதிமுக-விற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின் அதிமுக வெற்றிநடை போடும் தமிழகமே என்று தனது அடியை எடுத்து வைத்தது.அதற்குபிறகு சசிகலா ஆன்மீகத்தில் கால் எடுத்து வைத்தார்.பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தார்.தற்போது போயஸ்கார்டனிலிருக்கும் வேதா இல்லத்தை போலவே அதற்கு எதிராகவே ஓர் இல்லத்தை கட்டி வருகிறார்.இந்த இல்லத்தை சட்டமன்ற தேர்தல் முடிவு வருவதற்கு முன் கட்டி முடிக்கும் படி அறிவுறுத்தி உள்ளார்.
ஜெயலலிதா அவர்கள் எப்படி தனது தேர்தல் பணிகளை போயஸ்கார்டன் வேதா இல்லத்திலிருந்து ஆரம்பித்தாரோ,அதே போல சசிகலாவும் அவர் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் வேதா இல்லத்திலிருந்து ஆரம்பிக்க போவதாக கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி இந்த முறை கண்டிப்பாக அதிமுக ஆட்சி அமைக்காது,மீண்டும் சசிகலா மூலமாகவே அதிமுக கூட்டணி அமையும் என்றும் சுற்றுவட்டரங்கள் கூறுகின்றனர்.இதனால் தான் அவர் இந்த வீட்டை தேர்தல் முடிவுக்கு முன்பே கட்டிமுடிக்க வலியுறுத்தி வருவதாக கூறுகின்றனர்.இவர்கள் கூறுவதற்கு இனங்கதான் சசிகலாவும் விரைவாக கட்டுமான பணிகளை முடிக்கும் படி 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.