Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பின்பு கடந்த 2014ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அழைக்கப்படுகின்றார். சசிகலாவிற்கு 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இதன் தொடர்ச்சியாக சசிகலா மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.சசிகலாவுடைய விடுதலை சம்பந்தமாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்ததாவது, நீதிமன்றத்திலிருந்து தகவல் கிடைத்ததும் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று சசிகலா தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்தும் நடைமுறை முடிவடைந்ததும் இரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆவார் என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் இருக்கும் சசிகலா 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி இருக்கின்றார். ஆகவே மிக விரைவில் சசிகலா விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சசிகலா வெளியே வந்ததும் பெங்களூருவில் இருந்து சென்னை வரையில், அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு தருவதற்காக சசிகலாவுடைய தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான கார்களில் பெங்களூரு சென்று அவரை வரவேற்கவும், இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்படலாம் என்று தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

Exit mobile version