சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

0
116

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுடைய நான்கு வருட கால சிறை தண்டனை முடிந்த நிலையில், நீதிமன்றம் அபராதமாக விதித்தார் 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி விட்ட காரணத்தால், அவர் விரைவிலேயே விடுதலை ஆகிவிடுவார் என்று எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகின்றது.

1991-96 அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அதோடு 100 கோடி ரூபாய் அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டது. அதோடு சுதாகரன் சசிகலா இளவரசி ஆகியோருக்கும் நான்கு வருட காலம் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது பெங்களூரு சிறப்பு சிறப்பு நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது இதில் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா இயற்கை எய்தினார். இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்து இருந்தாலும் அவர் இயற்கை எய்திய காரணத்தால், சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நான்கு வருட கால தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை சம்பந்தமாக சில தேதிகளை குறிப்பிட்டு கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாவதும் அதன் பின்னர் அது உண்மை கிடையாது என்று மறுக்கப்படுவதுமாகவே இருக்கின்றது. கடைசியாக நான்கு வருட கால தண்டனை முடிவடைந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 அல்லது இருபத்தி எட்டாம் தேதி சசிகலா வெளியே வருவார் என்று சிறைத்துறை தரப்பிலேயே தகவல் வெளியானது.

இதற்கிடையே சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொகையான 10 கோடியே 10 லட்சத்தை அவர் தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமார், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நீதிமன்ற பதிவாளரிடம் இரு வங்கி வர ஓலைகள் மூலமாக செலுத்தப்பட்டு அதனை நீதிபதி ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவாரா அல்லது ஜனவரி மாதம் இறுதியில் தான் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கின்றது.