சசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா!

0
124

சசிகலாவின் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு சிறைத்துறை அதிகாரி பரிந்துரை செய்யவில்லை என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கின்றது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் எதிர்வரும் பிப்ரவரி முடிகின்றது இதனை தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நன்னடத்தை விதிகளின் படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகத்திடம் சசிகலாவின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இந்த நிலையில் சசிகலா டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி சிறையில் இருந்து வெளியே வருகின்றார் என்ற செய்திகள் தீவிரமாக பரவியதே இது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் விசாரணை செய்தபோது சசிகலா விடுதலை குறித்த தகவல் உண்மை தன்மை அற்றது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது பெங்களூர் சிறை விதிகளின்படி ஒவ்வொரு கைதிக்கும் ஒவ்வொரு டைரி இருக்கின்றது. அந்த டைரியில் மாத இறுதியில் கைதியின் நன்னடத்தை பற்றி குறிப்பு எழுதி வைப்பார்கள் வருடத்தின் கடைசியில் அதனை உள்துறைக்கு அனுப்புவது விதி ஆனாலும் சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய மூவருக்கும் நன்னடத்தை நாட்கள் கணிப்பு சம்பந்தமாக சிறைத் துறை கண்காணிப்பாளர் உள்துறை அமைச்சகத்துக்கு இதுவரையில் எந்த ஒரு பரிந்துரையும் செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கிருஷ்ணப்பன் சசிகலா விடுதலை பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

சசிகலா வழக்கறிஞர் சிறைத்துறை அதிகாரியிடம் நன்னடத்தை நாட்கள் கழிப்பு செய்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் அந்த மனு குறித்து உள்துறை செயலாளருக்கு சிறைத்துறை இதுவரையில் எந்த ஒரு பரிந்துரையும் அளிக்கவில்லை.

நன்னடத்தை நாட்கள் கழித்து செய்வதில் சில நடைமுறைகள் இருக்கின்றன சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்துறைக்கு குறிப்பிட்ட நபருக்கு நன்னடத்தை நாட்கள் கழிப்பு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும் அதோடு கைதியின் நன்னடத்தை டைரியையும் அனுப்பிவைப்பார்கள் கைதிகளுக்கு நன்னடத்தை நாளை கழித்து தண்டனை காலம் முடியும் முன்பாகவே விடுதலை செய்வதற்கு 5 பேர் கொண்ட குழு இருக்கின்றது.

அந்த குழுவில் உள்துறை செயலாளர் ரூபா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஐ
எ.எஸ் ஐபிஎஸ் சிறைத்துறை அதிகாரி என்று இருப்பார்கள் இவர்கள் தான் அதனை முடிவு செய்வார்கள்.

அப்படியே ரெமிஷன் கொடுத்தாலும் முன்கூட்டியே வரக்கூடியவர் சுதாகர் தான் இரண்டாவது வெளியே வருபவர் இளவரசி மூன்றாவதாக வருபவர்தான் சசிகலா காரணம் வழக்கு நடந்த காலங்களில் சுதாகரன் சுமார் நான்கு மாதங்கள் சிறையில் இருந்து இருக்கின்றார் தண்டனை பெற்று சிறைக்கு சென்றவர் இதுவரையில் பரோலில் வெளியே வரவில்லை இளவரசி ஒருமுறை பரோலில் வெளியே வந்திருக்கின்றார் சசிகலா இரண்டு முறை பரோலில் வெளியே வந்து இருக்கின்றார்.

பரோலில் சென்ற காலங்களை கழித்தால் சசிகலா கடைசியில்தான் வருவார் ஆயினும் ரெமிஷன் கொடுப்பது தொடர்பாக உள்துறையின் சிறைத் துறையும் இதுவரை ஆலோசனை செய்யவில்லை சசிகலா சிறை விதிகளை மீறி உள்ளார் என்ற குற்றச்சாட்டை கூறிய ரூபா தான் இப்போது உள்துறைச் செயலாளராக இருக்கிறார் இதன் காரணமாக ரெமிஷன் வழங்குவதில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது என்று விளக்கம் கூறினார்