வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை நிறைவு செய்யும் முன்பே நன்னடத்தை அடிப்படையில் வெளியில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின.இதன் அடிப்படையில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின்னர் அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதை உறுதி செய்யும் வகையில் பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிகலா ஆகஸ்ட் மாதத்தின் 15 தேதிக்கு பின்னர் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது போன்ற செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யும் பரிசீலனை எதுவும் இல்லை என கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்ன அரசியல் கணக்கு போட்டு அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா தரப்பினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அவரது உறவினர்களை பயன்படுத்தினர் என்ற குற்றசாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள்,அலுவலகங்களில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை ஆய்வு செய்தனர்.
அப்போது கங்கா பவுண்டேசன் சார்பாக கட்டப்பட்ட ஸ்பெக்ட்ரம் மால் என்ற கட்டிடத்தை சசிகலா தரப்பினர் மறைந்த ஒரு தலைவரின் பெயருக்கு விற்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பரிவர்த்தனையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
இன்னிலையில் சசிகலாவின் பணமதிப்பிழப்பு நேரத்தில் நடத்தப்பட்ட பணபரிவர்த்தனைக்கும் அந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கும் வருமான வரித்துறையின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணையில் அடுத்த 15 நாட்களில் உரிய ஆவணங்களுடன் வருமான வரித்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பினாமி சொத்து தடைச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளதால் சசிகலாவின் விடுதலைக்கு மீண்டும் பிரச்சனையாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.