Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அன்புக்கு நான் அடிமை! மவுனம் கலைத்தார் சசிகலா!

பெங்களூருவில் இருந்து சிறைவாசம் முடித்து சென்னை வந்த சசிகலா நான் அடக்குமுறைகளுக்கு அடி பணிய மாட்டேன் என்று தெரிவித்து இருக்கின்றார். இதன் மூலமாக, அவருடைய 4 வருடகால மௌனம் கலைந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தி குப்பத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா ,அன்புக்கு நான் அடிமை ,தமிழ் பண்புக்கு நான் அடிமை கொண்ட கொள்கைக்கு நான் அடிமை இந்த தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை ஆனால் அடக்குமுறைக்கு எப்பொழுதும் நான் அடிபணிய மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருக்கிறார். திமுகவின் கொடியை உபயோகப் படுத்துவதற்காக அமைச்சர்கள் புகார் தெரிவித்தது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், அது ஆளுங்கட்சியினரின் பயத்தை காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

ஏன் ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டது என்று எனக்கு தெரியும் என்று தெரிவித்த அவர், விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்க இருக்கின்றேன் அப்போது எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று தெரிவித்து காரில் இருந்தபடியே பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அதிமுக என்பது பற்பல சோதனைகளை சந்தித்த போதும் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் கீழ் வந்த ஒரு தாய் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதுதான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்திருக்கிறார் சசிகலா.

Exit mobile version