Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலா வீட்டின் முன் கூடிய அந்த ஆறு நபர்கள் தொற்றிக் கொண்ட பரபரப்பு! போலீஸ் குவிப்பு!

திருமதி சசிகலா நேற்றைய தினம் மாலை அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அதிமுகவின் ஆட்சி மறுபடியும் மலர வைக்க வேண்டும்.ஜெயலலிதா எதிரி என்று அடையாளம் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் செய்ய வேண்டும் என்று அவருடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். சசிகலா. சசிகலாவின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், சசிகலா தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை தியாகராய நகர் பகுதியில் இருக்கின்ற சசிகலாவின் இல்லத்திற்கு முன்பு சின்னம்மா பேரவையை சேர்ந்த ஆறு பேர் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக ,அப்பகுதியில் மிகப்பெரிய பரபரப்பு உண்டாகி இருக்கிறது.

அந்த ஆறு நபர்களில் எஸ் எஸ் சூர்யா, ஜான்சன் ,மோகன், கவாஸ்கர் போன்றோர் ஒரு புகைப்படத்தை கையில் ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த புகைப்படத்தில் சசிகலா மற்றும் ஜெயலலிதா உருவம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் எதிர்கால முதலமைச்சர் சின்னம்மா என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் போராட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மேலும் 40 நபர்கள் வர இருப்பதாகவும் அந்த ஆறு பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், காவல்துறையினர் அந்த ஆறு பேரையும் கலைந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். இருந்தாலும் சசிகலா மறுபடியும் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தும் விதமாக அவர்கள் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, அங்கே பத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்து வருகிறார்கள்.

Exit mobile version