சசிகலா கொடுத்த முக்கிய பேட்டி! அதிர்ச்சியில் அதிமுக!

0
106

அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்களுடன் மற்றும் நிர்வாகிகள் உடன் தொலைபேசியில் மூலமாக தொடர்ச்சியாக சசிகலா உரையாற்றி வருகிறார் அவர் விரைவாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த சசிகலா முடிவு எடுப்பதற்கு முன்னரே எதிர்வரும் 23ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருக்கிறார் என்று தொலைக்காட்சிகளிலும் பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இது தொடர்பாக விசாரணை செய்த சமயத்தில் தான் தெரியவந்தது அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்பதும் இது தொடர்பாக சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய ஒரு வாட்ஸ்அப் தகவல் நமக்கு கிடைக்கப்பெற்றது.அந்த தகவலின்படி வரும் 23ம்தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்வதாக சொல்லப்படும் தகவல் உண்மை இல்லை ஆனால் சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லும் போது நிச்சயமாக எல்லோருக்கும் தகவல் சொல்லப்படும் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் நோய்த்தொற்று ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரையில் சசிகலா காத்திருக்க இருக்கின்றார். ஜெயலலிதாவின் நினைவிடத்தை சென்று பார்த்துவிட்டு அங்கிருந்து அடுத்தடுத்து மாவட்ட ரீதியாக சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லும் சமயத்தில் தன்னுடன் ஒரு மாபெரும் கூட்டம் பின் தொடர வேண்டும் என்று அவர் கருதுவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு சசிகலா காத்திருக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது.

இதற்கு இடையில் ஜெயா தொலைக்காட்சியில் மூலமாக சசிகலாவின் ஒரு நீண்ட பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. பத்திரிக்கையாளர்களும் அரசியல் ஆய்வாளருமான ஒருவர் சசிகலாவை ஜெயா தொலைக்காட்சி சார்பாக சந்தித்து அந்த பேட்டி எடுத்திருக்கின்றார். சுமார் 50 நிமிடங்கள் என இரண்டு மூன்று தினங்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்படும் விதத்தில் அந்த பேட்டி எடிட் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த பேட்டியில் அதிமுக அதில் தனக்கு இருக்கின்ற உரிமை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகிய சமயம் ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கியது எதற்காக என்று ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னால் நடந்த பல விஷயங்களை போட்டு உடைக்க இருக்கின்றார் சசிகலா என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் இறப்பில் இருக்கின்ற மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பன்னீர்செல்வம் தர்மத்தை தொடங்கினார். இதற்காகவே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.இதை தொடர்ந்தே எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும், ஒன்றாக இணைந்தன.இருந்தாலும் அவ்வாறு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அந்த ஆட்சிக்காலம் முழுவதும் இருந்தும் எந்த பயணும் இல்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணம் வரையில் அவருக்கு அருகிலேயே இருந்தவர் சசிகலாதான். இதன் அடிப்படையிலேயே அன்று சசிகலா மீது பல தரப்பட்ட புகார்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களிடையேயும் இந்த விவகாரத்தில் இது ஒரு மிகப்பெரிய சந்தேகமும் எழுந்தது அதன். விளைவாகக் கோபமும் அப்போது இருந்தது. இதுகுறித்து கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே பகிரப்பட்டன. இந்த சூழலில் தற்சமயம் சசிகலா கொடுத்திருக்கும் பேட்டியில் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மம் தொடர்பாக உண்மையை பேசுவார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரை தாண்டி பொதுமக்களின் இடையேயும் நிலவி வருகிறது.