Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலா விடுதலை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாதாம்! சொன்னது யார் தெரியுமா?

சசிகலாவின் விடுதலை அரசியலில் எந்த ஒரு அதிரடி மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் கூறியுள்ளார். மேலும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தாத வண்ணம் மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அனைத்து விவசாயிகளையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் விவசாய விரோத சட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் மேலும் இந்த சட்டங்களுக்கு எதிராக வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் இந்த மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்றும்  இரா.முத்தரசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

திமுக கட்சி மதசார்பற்ற கட்சி மட்டுமல்லாமல் தமிழகத்தை மீட்டெடுக்க வல்ல ஒரு சிறந்த கட்சியாகும் என்றும் இந்த திமுக கூட்டணி தேர்தலை எதிர்கொண்டு மாபெரும் வெற்றி பெறும் என்றும் இரா.முத்தரசன் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் அதிமுக கட்சி, முதல்வர் வேட்பாளர் பதவிக்கு மோதல் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு நிர்வாகம் பாதிப்படைந்துள்ளது  என்றும்  என்ன தான் இந்த மோதல் உட்கட்சி பூசல் என்றாலும் இவர்கள் வெளியே தெரியும்படி மோதல் நடத்திக் கொள்வது பொதுமக்களையும் பாதிக்கிறது என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.

Exit mobile version