Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறைவாசம் முடிந்தது! இன்று விடுதலையாகிறார் இளவரசி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன் சசிகலா இளவரசி போன்றோருக்கு நான்கு வருட காலம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. சிறைத்தண்டனை முடிவுற்றதை அடுத்து சசிகலா ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் இதற்கிடையில் அவருக்கு கொரோனா ஏற்பட்ட காரணத்தால், அவர் ஏற்கனவே உடல்நலம் பாதிப்படைந்த காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சசிகலாவை தொடர்ந்து இளவரசி அவர்களுக்கும் கொரோனா ஏற்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அண்மையில் இளவரசி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார் . இந்த நிலையில் அவர் இன்றைய தினம் தன்னுடைய தண்டனை காலம் முடிவடைந்து விட்டபடியால் சிறையிலிருந்து விடுதலை ஆக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version