Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

Sasikala's daughter-in-law attempted suicide! Family members in grief

Sasikala's daughter-in-law attempted suicide! Family members in grief

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

சசிகலாவிற்கு ஜெயராமன் என்ற ஒரு அண்ணன் உள்ளார். இவருடைய இளைய மகன் பெயர் தான் விவேக். இவர் ஆரம்பகட்ட காலத்திலிருந்து ஜெயலலிதாவின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.விவேக் ஜாஸ் என்னும் சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு விவேக்கிற்கு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் தனியாக வசித்து வருகின்றனர். சமீப காலமாக விவேக் மற்றும் கீர்த்தனா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து விவேக் நள்ளிரவில் தாமதமாகவே வந்துள்ளார்.இதுகுறித்து கீர்த்தனா கேள்வி எழுப்பினால் இருவருக்கும் இடையே சண்டை தான் ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத கீர்த்தனா நேற்று இரவு தூக்க மாத்திரைகள் பலவற்றை விழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போலோ மருத்துவமனையில் கீர்த்தனாவிற்கு தற்பொழுது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சசிகலாவிற்கு மருமகள் முறையான கீர்த்தனா தற்கொலை முயற்சி செய்து கொண்டதால் குடும்பமே சோகத்தில் உள்ளது.

Exit mobile version