சசிகுமார் பட நடிகைக்கு திருமண பேச்சுவார்த்தையா? முடிந்தது நிச்சயதார்த்தம்!

0
162

நம் மக்களிடையே திரையுலகில் அதிக படங்களில் தன் முகங்களை காட்டாவிட்டாலும் குறைந்த படங்களின் மூலம் மக்களின் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்திய நடிகர் நடிகைகளும் இருக்கின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யாவின் “அமரகாவியம்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த “மியா ஜார்ஜ்” நல்ல வரவேற்பை பெற்றார். அவர் பள்ளி சீருடையில் பவ்யமான தோற்றத்தில் அறிமுகமாகி ஆழமாக காதல் செய்யும் பள்ளிப்பருவ பெண்ணாக ரசிகர்கள் மனதில் பதிந்தார். தமிழ் திரையுலகில் இதுவே இவருக்கு முதல் படம்.

இவர் கேரள பின்புலத்திலிருந்து வந்த ஒரு நடிகை. இவர் தமிழில் “அமரகாவியம், இன்று நேற்று நாளை,வெற்றிவேல், ரம், ஒரு நாள் கூத்து, எமன்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2012ஆம் ஆண்டு “கேரளா மிஸ் பிட்னஸ்” என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். இதன் பிறகு இவர் பட வாய்ப்புகள் பெற்று திரையுலகில் நுழைந்தார். இவர் ஒரு ஆங்கில முதல்நிலை பட்டதாரி.

இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜ் அவர்களுக்கும் தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்றிருக்கும் திருமண பேச்சு வார்த்தைகள் உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி மியா மற்றும் அஸ்வின் பிலிப் நிச்சயதார்த்தம் கோட்டையம் மாவட்டத்திலுள்ள பாலா செயின்ட் தாமஸ் அறிவாலயத்தில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இவர்கள் நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.