சாத்தன்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றம்! குற்றவாளி உயிருக்கு ஆபத்து என கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கொலை வழக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது.தனியார் செல்போன் கடை வைத்திருத்த மகன் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தையான ஜெயராஜ் ஆகிய இருவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொல்லப்பட்ட சம்பவம் பேர் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அந்தவகையில் அந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது.மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஓர் மேல்நோக்குக்காகத்தான் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,மதுரை சிறையில் எங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதால் கேரளாவுக்கு மாற்றம் செய்யும்படி சப்இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.இவர் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் இடைக்கல் மனு தாக்கல் செய்தார்.அதில் அவர் கூறியது,எஸ்.ஐ.ரகு கணேஷ் போட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.வழக்கு விசாரணையை கேரளா மாநிலத்துக்கு மற்ற உத்தரவிட கூடாது,அதற்கான அவசியமும் இல்லை என குறிப்பிட்டார்.
இந்த வழக்கானது நேற்று நீதிபதி போபண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது உயிரிழந்த ஜெயராஜ் மனைவி செல்வராணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்,பாரிவேந்தன் ஆகியோர் கூறியது,சாத்தன்குளம் கொலைவழக்கில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அனைத்தும் தமிழக அரசுக்கும் தெரியும் என்பதால் மாநில அரசையும் எதிர் மனுதாரராக இணைக்க வேண்டும் என்றார்.பின்னர் நீதிபதிகள் பிறபித்த உத்தரவில் செல்வராணியின் இடைக்கால மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது.மேலும் தமிழக அரசும் எதிர்மனுதாரராக இணைக்கப்படுகிறது.அதுமட்டுமின்றி இந்த வழக்கை கேரளா மாநிலம்,திருவனந்தபுரத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று கூறியுள்ளனர்.