Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சதுரகிரி மலைக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை! வனத்துறை அதிரடி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது, அதேபோல வருகின்ற 11ஆம் தேதி பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

வழக்கமாக பிரதோஷம், பௌர்ணமி, உள்ளிட்ட தினங்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருவார்கள். இந்த சூழ்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருவதாலும், கோவிலுக்கு செல்லும் மலை பாதையின் குறுக்கே செல்கின்ற ஓடைகளில் நீர்வரத்து காணப்படுவதாலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் வருகின்ற 12ஆம் தேதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை வனத்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆகவே பக்தர்கள் யாரும் அனுமதி ரத்து செய்யப்பட்ட தினங்களில் மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்

Exit mobile version