Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சத்தியமங்கலம் நகராட்சியில் முறையே 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் பாமக!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நகராட்சியில் ஒட்டுமொத்தமாக 27 வார்டுகள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பாக 8வது வார்டில் போட்டியிட்ட உமா என்பவர் 256 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார்.

அதேபோல 23வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அரவிந்த் 469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் 13வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரி 448 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

அதேபோல 14 வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசு 297 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். ஈரோடு மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளில் சத்தியமங்கலம் நகராட்சியில் மட்டுமே பாரதிய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version