திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. இந்த பேரவைக்கு தலைமை தாங்கிய நடிகர் சத்யராஜ் அவர்கள் திராவிடமே தமிழர் அரண் என்ற தலைப்பில் தன்னுடைய உரையை அனைவரது மத்தியிலும் கூறியுள்ளார்.
இவர் கூரிய விஷயங்கள் பின்வருமாறு :-
“தமிழ் தேசியமானது ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும் தவிர, திராவிடத்தை அல்ல” என்று இவர் பேசிய கருத்துக்கள் திமுகவிற்கு ஆதரவாக பேசியதை போன்று இருந்ததாக பல கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இவர் பேசுகையில், ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் குடுத்தது திராவிட இயக்கங்கள் தான். திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றுதான் என மேதகு பிரபாகரனே கூறியுள்ளார். நான் 15 வயது இருக்கும் போது முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது எனக்கு ஆசை வந்தது. கலைஞரின் மீதோ காதல் வந்தது என்று கூறியிருக்கிறார் நடிகர் சத்யராஜ் அவர்கள்.
திராவிட சித்தாந்தத்தின் தேவைகள் என்ன என்பதனை வட மாநில தொழிலாளிகளுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும் என்றும், அவர்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் இருந்து ஒடுக்கு முறையின் காரணமாகத்தான் இங்கு பணிக்கு வருகின்றனர். எனவே, உங்களது சொந்த மண் போல தமிழ்நாட்டில் சாதி பாகுபாடு இல்லை என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் தான் ஆற்றிய உரையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.