Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருந்து பல கலைஞர்கள் தங்களின் வேறு பணிகளுக்காக வெளியேறினர். மேலும் சில கலைஞர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் இயற்கை எய்தியுள்ளனர். நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் சமீபத்தில் மறைந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியன் 2 படத்தைத் தொடங்குவதில் உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டிவரும் நிலையில் படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி மீதிப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகக் நடிகர் சத்யராஜை இயக்குனர் ஷங்கர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இது சம்மந்தமாக இருவரும் சந்தித்து பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தனது திரைவாழ்க்கையை வில்லனாக ஆரம்பித்த சத்யராஜ் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரின் பல படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். கமலுடன் அவர் நடித்த காக்கி சட்டை படத்தில் இடம்பெற்ற தகடு தகடு வசனம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்தியன் 2 படத்தில் நடிக்க சத்யராஜ் சம்மதித்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகும்.

Exit mobile version