CINEMA: நடிகர் சத்யராஜின் மனைவி 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால் உருக்கமாக பதிவிட்ட சத்யராஜ் மகள்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். இவரின் மனைவி மகேஸ்வரி 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதாக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது அம்மா கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரை நாங்கள் வீட்டில் வைத்து தான் பார்த்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் உணவு டியூப் வழியாக செலுத்துகிறோம்.
ஆனால் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது அவர் மீண்டும் கோமாவில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அம்மா மீண்டும் பழைய மாதிரி கிடைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதனால் நாங்கள் மனதளவில் உடைந்து விட்டோம்.
அம்மா கோமாவில் இருப்பதால் அப்பா தான் தனி ஆளாக குடும்பத்தை பார்த்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் பார்த்து வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் எனது அப்பாவின் அம்மா இறந்துவிட்டார்.நானும் எனது அப்பாவுக்கு தாயாக இருந்து வருகிறேன். தற்போது நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தாயாக மாறி அன்பை செலுத்தி வருகிறோம் என்று என உருக்கமாக பதிவில் தெரிவித்துள்ளார்.