Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!

சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டு ஆண்டுகள் சஞ்சரிக்க கூடியவர். இவர் 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி மூன்றாம் பாதத்திலிருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 6ஆம் திகதி, காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இந்நிலையில், சனி பகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

அதாவது சனிபகவான் குறிப்பிட்ட ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை அள்ளித் தரப் போகிறார். அந்த வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டால், இந்த சனிப்பெயர்ச்சி காலமானது அவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் காலமாக அமையும்.

1.ரிஷபம் :

*பணியிடத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
*உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும்.
*பணி பெரிதும் பாராட்டப்படும்.
*தொழிலில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும்.
*அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
*நிதி நிலைமையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.

2.துலாம் :
*புகழ், செல்வம், பணம் என அனைத்தும் கிட்டும்.
*நீண்ட காலமாக செய்த கடின உழைப்பின் பலனைப் பெறும் நேரமாக இது இருக்கும்.
*குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.
*உடல்நலம் மேம்படும்.
*மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையாக உணருவீர்கள்.
*மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் நுழையும்.

3.விருச்சிகம் :
*அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
*நிதி நிலை நன்றாக இருக்கும்.
வேலை மாற விரும்பினால், இது அதற்கு ஏற்ற நேரமாக இருக்கும்.
*குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
*தொழிலில் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
*திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.

4.மகரம் :
*மங்களகரமானதாக இருக்கும்.
*தடைபட்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடந்துமுடியும்.
*சில பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
*வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
*குடும்ப உறுப்பினர்களுடனும் உறவுகள் சுமுகமாக இருக்கும்.

Exit mobile version