Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனி பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைநிதானமாக செயல்பட்டு நினைத்ததை முடிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே.சனியின் நாமம் : விரய சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைகுடும்ப ஸ்தானம்ரண ரோக ஸ்தானம்பாக்கிய ஸ்தானம்

உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு அயன சயன போக ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

மேலும் விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். மனதில் எழும் தேவையற்ற குழப்பங்களினால் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.

சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மேம்படும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்படவும். மனதில் தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம் பகிரும்போது தெளிவு கிடைக்கும். சிலருடைய அறிமுகம் மாற்றமான சூழலை ஏற்படுத்தும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சில தடைகளுக்கு பின் சாதகமாக அமையும். பணியில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். புதிய பயிற்சி தொடர்பான வகுப்புகளில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காமல் இருப்பது நன்மை அளிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு :குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் சினம் கொண்ட வார்த்தைகளை தவிர்க்கவும். எதிர்காலம் சார்ந்த முடிவுகளை நன்கு சிந்தித்து எடுக்கவும். குடும்ப ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். கணவரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :கல்வி தொடர்பான வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து தெளிவுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றைய தினத்தில் எழுதிப் பார்ப்பது நல்லது. அறிவுரைகள் கூறுவதால் பெற்றோர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். கல்வி தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வழிபாடு முறை :தேனியில் உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவானை வணங்கிவிட்டு அதற்கு பின்புறம் உள்ள வடக்கு பார்த்த தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்ய நன்மைகள் பெருகும்.

 

Exit mobile version