Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி 27.12.2020 முதல்  19.12.2023 வரை கலை ரசனை மிகுந்த, எதையும் நுட்பத்துடன் சிந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே.

சனியின் நாமம் : அஷ்டம சனி
சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைதொழில் ஸ்தானம்குடும்ப ஸ்தானம்பஞ்சம ஸ்தானம்
உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்து வாழ்க்கையில் புதிய பரிணாமத்திற்கு அழைத்து செல்வார்.

சனி தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் ஆலோசனைகளும் உங்கள் வாழ்க்கையில் புதுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் கால கட்டமாகும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் சற்று அதிக ஈடுபாட்டை செலுத்துவதன் மூலம் தொழில் நல்ல நிலைக்கு உயரும். மேலும் தந்தையின் ஆரோக்கியம் சீரடையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கலாம்

சனி பெயர்ச்சி பெண்களுக்கு :
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு. சில இடங்களில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விட்டுக்கொடுத்து போகும் காரியங்களில் வெற்றி கொடியை நாட்டுவீர்கள். சோதனைகள் பலவற்றையும் சாதனைகளாக்க போராட வேண்டிய காலமிது. வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. வரவு, செலவுகளில் கவனத்துடன் செயல்படுவதால் பல மாற்றங்களை உருவாக்க போகிறீர்கள். வழக்குப்பதிவு செய்திருப்பவர்கள் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டுமெனில் வழக்குகளை தள்ளிப்போடுவது சிறப்பு.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :ஆசிரியர்களின் மேலான ஆலோசனையை பின்பற்றுவதால் முன்னேற்றமான சூழல் அமையும். உயர்கல்வி தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற எண்ணங்களைத் தவிர்த்து தெளிவான சிந்தனையை மேற்கொள்ளவும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் செல்லும்போது ஆவணங்களை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும். போட்டித்தேர்வுகளில் ஈடுபடுபவர்கள் தங்களது பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை படிப்பதன் மூலம் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

வழிபாடு முறை :சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

Exit mobile version