Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைதர்மத்தை தலையாய நினைத்து, சுயநலம் பார்க்காமல் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே.

சனியின் நாமம் : பாத சனிச னி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசுக ஸ்தானம்அஷ்டம ஸ்தானம்லாப ஸ்தானம்

இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார்.சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

வாகன பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு ஒரு பங்கு மேலும் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு பயணம் மகிழ்ச்சிகரமானதாக அமையும். எந்தவொரு செயலிலும் முயற்சியை அதிகப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறலாம். பொருளாதார நிலையில் இருந்த மந்தத்தன்மை அகலும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விரும்பிய இடத்தில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு ஏற்படும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு :திருமணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த பெண்களுக்கு மனதிற்கு பிடித்த இடத்தில் திருமணம் கைகூடும். சிறு, குறு தொழில்கள் மேற்கொள்ளும் பெண்கள் தங்களது தொழிலில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நன்று. தாயார் வழி உறவுகளிடம் இருந்துவந்த மனவருத்தம் குறையும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். மறைமுக திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

வழிபாடு முறை :வியாழக்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேம்படும். மேலும் நன்மை நடக்கும்.

Exit mobile version