Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

 

27.12.2020 முதல் 19.12.2023 வரைகடல் போல் கருணையுள்ளம் கொண்ட கன்னி ராசி நேயர்களே. சனியின் நாமம் : பஞ்சம சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைகளத்திர ஸ்தானம்லாப ஸ்தானம்குடும்ப ஸ்தானம்உங்கள் ராசிக்கு 4ஆம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் இருக்கிறார்.

சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கின்றார். ஆரோக்கிய குறைபாடு இருந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீரடையும். உறவினர்களிடம் இணக்கமான சூழல் ஏற்படும். கணவன், மனைவி உறவில் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி அனுசரித்து செல்லவும். பாதியிலிருந்த கட்டிடப்பணிகள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.மேலும் குழந்தைகளின் எண்ணங்களை தெரிந்துகொண்டு செயல்படவேண்டும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழலும், மாற்றமும் உண்டாகும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும்போது கவனம் வேண்டும். உடைமைகள் கொடுப்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தரர்களுக்கு :சக ஊழியர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நன்று. சேமிப்புகளில் இருக்கும் ஏதேனும் ஒரு பங்கு தங்கள் வாரிசுகளின் நலன் கருதி செலவிடுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளால் பணிகளில் காலதாமதம் ஏற்படும்.

சனி பெயர்ச்சிபெண்களுக்கு :உறவு முறையில் திருமணம் வாய்ப்புகள் அமையும். விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணம் திருமணம் யோகம் கைகூடும். சுயதொழில் முயற்சி கைகொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் சுமூகமாகும். தாய்வழி சொந்தங்களின் ஆதரவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானப்போக்கை கடைபிடிப்பது அவசியம். புத்திரப்பாக்கியம் கைகூடும். இடுப்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கும். புத்திசாலியான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படைக்கல்வி பயில்பவர்களுக்கு தங்களது கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மையை குறைத்து பாடத்தில் கவனம் செலுத்தவும். ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு பணி வாய்ப்புகள் கைகூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவீர்கள். போட்டித்தேர்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

வழிபாடு முறை :திருப்பைஞ்ஞிலி சென்று எமதர்மனுக்கு வழிபாடு செய்து வர ஆரோக்கியம் மேம்படும்.

 

Exit mobile version