Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சத்யராஜின் பெரியார் கொள்கை!! மகள் ஆதரவு.. மகனோ!!

Satyaraj's Periyar Policy!! Daughter Support.. Son!!

Satyaraj's Periyar Policy!! Daughter Support.. Son!!

சத்யராஜ் பெரும்பாலும் பெரியார் கொள்கையை ஆதரிப்பவர். எந்த இடத்திலும் பெரியார் கொள்கையை எடுத்துக் கூறுவதில் தயங்க மாட்டார். ஆகவே, இவர் திமுக உடன் எப்பொழுதும் ஈர்ப்பில் இருப்பார். இவரது மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக இருப்பினும் சமூக பிரச்சனைகளை எதிர்த்து உத்வேகமாக குரல் கொடுப்பவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர் திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்துள்ளார். அப்பாவைப் போலவே மகளும் பெரியார் கொள்கை மீது பற்றுக் கொண்டுள்ளார்.

சத்யராஜ் மகன் சிபி ராஜ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இவர் நேற்று( ஜனவரி 21) பரந்தூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் ஸ்பீச்சை தனது instagram பக்கத்தில் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார். அதன் கீழே கூத்தாடி எனவும் மென்சன் செய்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற தவெக மாநாட்டில் கூத்தாடி குறித்து விஜய் எடுத்துரைத்தது முதலே சிபி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூத்தாடி என பெயர் மாற்றம் செய்துள்ளார். எனவே இவர் தவெக வை ஆதரிக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. சத்யராஜின் மகளோ திமுக, மகனோ தவெக களம் காண இருக்கிறார்கள் என ரசிகர்கள் இச்செய்தியை பெரும்பாலும் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version