Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பாதிப்பில் 13-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக அமெரிக்காவும், பிரேசிலும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகும். இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் சவுதி அரேபியா13-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1,413 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது . இதன்மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேபோல் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை   3,369 ஆக அதிகரித்துள்ளது.
Exit mobile version