Saudi Govt: தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அண்டார்டிகா பனிப்பாறைகள் எடுத்து வர சவுதி அரசு திட்டம்.
இந்த உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும். அந்த நீர் 97.5 சதவீதம் மனிதன் குடிக்க முடியாத உப்பு நீராக இருக்கிறது. வெறும் 2.5 சதவீதம் நீர் மட்டுமே நன்னீர் இருக்கிறது. தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் உலக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதிகப்படியான மழைப் பொழிவு, அதிகப்படியான வெப்பம் என பருவ நிலை முற்றிலும் மாறி இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக புவி வெப்பமயமாதல் காரணமாக கூறப்பட்டு வருகிறது. அதை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பாலைவன நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டி வருகிறது. இந்த நாட்டில் நிலப்பரப்பில் துளையிட்டால் நீருக்கு பதிலாக கச்சா எண்ணெய் வரும்.
இந்த நாட்டில் மழைப் பொழிவு மிகவும் குறைவு எனவே சவுதி நாட்டில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய 1970 ஆம் ஆண்டு அந்த நாட்டின் அரசர் முகமது அல் ஃபைசல் எடுத்த முடிவு அனைத்து நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, அண்டார்டிகாவில் உள்ள பனிப் பறையை கப்பல்கள் மூலம் சவுதி அரேபியா நாட்டிற்கு கொண்டு வருவது தான் அந்த திட்டம்.
1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்த சுமார் 100 மில்லியன் டாலர் செலவாகும் என கணக்கிடப்பட்டது. அண்டார்டிகாவில் உள்ள பனிப் பறையை கடல் வழியாக கப்பல்கள் வாயலாக இழுத்து வரும் போது அப் பனிப்பாறை கரையாமல் இருக்க பல வித கண்டுபிடிப்புகள் நடத்தப்பட்ட இருக்கின்றன.
மேலும், இந்த திட்டத்தை முழுமையாக வெற்றி பெறும் என்பதை நிரூபிக்க அலாஸ்கா-வில் இருந்து சவுதி அரேபியா நாட்டிற்கு பனிப்பாறைகளை கரையாமல் விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்தை கைவிட்டது சவுதி அரசு. தற்போது கடல் நீரை குடிநீராக மாற்றி வருகிறது அந்நாடு.