சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற 26-ஆம் தேதி குஜராத் செல்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை; சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கருத்து.
குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் வேராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி கொடியைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டு தமிழர்களை வழியனுப்பி வைத்தார். அப்போது அவர்களிடம் பேசிய அண்ணாமலை இந்த நிகழ்வின் இறுதி நிகழ்வான வருகிற 26-ஆம் தேதி தான் நேரடியாக கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் புத்தாண்டு சிறப்பு தினத்தை ஒட்டி மதுரையிலிருந்து குஜராத் வேராவலுக்கு சிறப்பு பயணம் தொடங்கி இருக்கிறது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.