Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

குதிகால் வலியால் பலரும் அவதிப்படுவதுண்டு. ஏனென்றால் அவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் காலை வைக்கும் பொழுதே இதன் வலியை உணர வேண்டி இருக்கும்.

நாள் முழுவதும் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்த வலியானது மேலும் அதிகரிக்க தான் கூடும். குதிகால் வலி ஏற்பட்டால் அது அந்த கால் முழுவதும் வலியை உணர வைக்கும்.

ஏன் சிலருக்கு வீக்கம் கூட ஏற்பட்டு விடுகிறது. அதாவது குதிக்கால் எலும்பிலிருந்து ஒரு திசுவானது கட்டை விரலை நோக்கி செல்கிறது. அதற்கு பெயர் தான் பிளான்டார் அப்போநீரோசிஸ்.

இந்த விசுவானது சந்திக்கும் இடத்தில் ஒரு வித அலர்ஜி ஏற்பட்டால் அச்சமயத்தில் குதிகால் வலியானது உண்டாகிறது.

இது மட்டுமின்றி குதிகால் எலும்பில் தசை நார்கள் தொடர்ந்து உறைவதனாலும் வலி ஏற்படலாம். இந்த வலியை போக்க தைலம் போன்றவை உபயோகிக்காமல் வீட்டில் இருக்கும் இரு பொருட்களை வைத்து உடனடியாக குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

செங்கல்

எருக்கன் இலை

செய்முறை:

முதலில் செங்கலை நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பழுத்த ஏற்கண் இலைகளை வைக்க வேண்டும்.

இந்த பழுத்த எருக்கன் இலைகள் மீது குதிங்காலை வைக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குதிங்கால் வலி இருந்த இடம் தெரியாமல் போகும்.

Exit mobile version