இனிமேல் சைனஸ் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்க!! அருமையான வீட்டு வைத்தியம்!!

0
337

இனிமேல் சைனஸ் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்க!! அருமையான வீட்டு வைத்தியம்!!

இப்போது பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் சைனஸ். இது மூக்கின் அருகே கண்களுக்கு மேலே இருக்கும். பொதுவாக இந்த இடங்களில் எல்லாம் காற்று தான் நிரம்பி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக நீர் நிரம்பி இருப்பதை தான் சைனஸ் என்று கூறுவோம்.

இந்த சைனஸ் வருவதற்கான காரணம் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் அல்லது அடிக்கடி சளி தொந்தரவு ஏற்பட்டு அந்த அலற்சி இதனுடன் சேர்ந்து நீர் கோர்த்து சைனஸ் ஆக மாறலாம். எனவே நம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். அதற்கு முதலில் வெந்நீரில் குளிக்கவே கூடாது.

எண்ணெய் குளியல் தினமும் செய்து நமது உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை தினமும் குடிக்க வேண்டும்.

மேலும் அணு தைலம் பீனிசத் தைலம் என்று சொல்லக்கூடிய தைலம் சித்த மருந்தகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளவும். இதை மூக்கில் துளித்துளியாக விடவும். இவ்வாறு செய்வதால் மூக்கில் ஏதேனும் சதை வளர்ச்சி இருந்தால் அதை கரைத்து விடும். இதனாலேயே சைனஸ் பிரச்சனை பாதி அளவு தீர்ந்துவிடும்.

இது மட்டுமல்லாமல் சைனஸ் பிரச்சனையை தீர்க்கக் கூடிய இன்னொரு வழி என்னவென்றால், ஒரு வெற்றிலையில் தாலி சாதி சூரணம் வைத்து அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளவும்.

இதையெல்லாம் சேர்த்து வாயில் போட்டு சிறிது சிறிதாக விழுங்கி வர நுரையீரலில் இருக்கக்கூடிய அடைப்புகள் நீங்கி சைனஸ் பிரச்சனையான நீர் கோர்த்தலையும் சரி செய்து விடும்.