எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய விஆா்எஸ் திட்டம்!

0
118

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய விருப்ப ஓய்வூதிய திட்டம் – 2020யை (VRS) அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களை சரியாகவும், நிறைவாகவும் பயன்படுத்திக் கொள்ள இந்த விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க இருக்கிறது. வங்கியின் செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எஸ்பிஐ மேற்கொள்ள இருக்கிறது.

வங்கியில் மனித வளத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதும், செலவுகளைக் குறைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், விருப்ப ஓய்வூதிய திட்டத்துக்கான வரைவுத் திட்டம் தயாராக உள்ளது. வங்கியின் நிா்வாகக் குழுவின் ஒப்புதல் பெற்றதும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

எஸ்பிஐயில் 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்தவர்கள், 55 வயதை எட்டிய நிரந்தரப் பணியாளா்கள், தொடர்ந்து 3 முறை பணி உயர்வு வாய்ப்புகளை தவற விட்டவர்கள் போன்ற அனைவரும் இந்த விஆா்எஸ் திட்டத்தின்கீழ் விருப்ப ஓய்வு பெற தகுதி பெற்றவா்கள் ஆவா். இதில் புதிதாக எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்கு வரும் டிசம்பா் 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாத கடைசி தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.