Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம்

முரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம்

முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பற்ற வைத்த நெருப்பு இன்று தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி கொண்டிருக்கிறது,. அசுரன் படத்தை பார்த்துவிட்டு சும்மா இருந்திருந்தால் பரவாயில்லை, படத்தை பாடம் என்று சொல்லி தன் மேலேயே தானே நெருப்பை அள்ளி கொட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,.

பாமக ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தமிழக பாஜகவும் சும்மா விடுமா என்ன அவர்களும் தங்கள் பங்குக்கு நாங்களும் செய்கிறோம் என்று திமுகவை கதறவிட்டுக் கொண்டிருக்கிறது,. பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு இதுதான் சமயம் என்று எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடியை கொடுத்து வருகிறது பாஜக,.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் L.முருகனிடம் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி இடம் தான் என்றும் அதனை ஆய்வு செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தது தமிழக பாஜக,. இந்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு முரசொலி இடத்தை பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,.

இந்த சூழ்நிலையில் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், திமுக இளைஞரணி தலைவரும் முரசொலி நாளிதழின் நிர்வாக இயக்குனருமான திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது,. அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் வரும் 19 ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்களை நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கும்படி குறிப்பிட்டுள்ளது. இது திமுகவினரை கதிகலங்கச் செய்துள்ளது. மத்திய அரசு இதற்கு பின்னாலிருந்து செயல்படுவதாக திமுக உடன்பிறப்புகள் ஆங்காங்கே புலம்பி வருகின்றனர்.

முரசொலி விவகாரம் தற்போது முடித்து வைக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது, பாமக பற்ற வைத்த நெருப்பு இன்று பாஜக மூலம் கொழுந்துவிட்டு எரிகிறது நாளை காட்டுத்தீ போல் எரியுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version