படை என்பதும் ஒரு வகையான தோல் வியாதியாகும். இது சருமத்தில் வெளிர் சிவப்பு நிறத்தில் உருவாகும். இது சருமத்தில் லேசான வீக்கம், அதில் அரிப்பு, அந்த அரிப்பு பிற இடங்களில் பரவுதல், இதனால் சருமத்தில் எரிச்சல் போன்றவைகளை உண்டாக்கும்.
பெரும்பாலும் இது ஒவ்வாமை காரணமாக உண்டாகிறது. சில வகைகள் ஒவ்வாமை இல்லாமலும் உருவாகிறது. இந்த படை எனப்படும் தோல் நோய்கள் அதிகபட்சமாக 6 வாரங்களில் குணமாகும். அடுத்து வண்டுகடி ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிப்பெடுக்கும். இந்த அரிப்பு மற்ற இடங்களுக்கு பரவ கூடியது.
அப்படி பரவும்போது தோல் தடிக்கும், தடிப்புகளில் வலி உண்டாகும், இது காய்ச்சலை ஏற்படுத்தும். இது போன்ற தோல் நோய்களை குணமாக்க இயற்கையான சித்த வைத்திய முறையை பார்க்கலாம்.
இது ஒரு வகையான சூரணம் ஆகும். இதில் குறிப்பிட்ட பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இதற்கு தேவையான பொருட்கள்.
வெள்ளெருக்கு 20கிராம்
சங்கன் வேர்ப்பட்டை 20 கிராம்
சிவனார் வேம்பு 40 கிராம்
பறங்கிச்சக்கை 80 கிராம்
செய்முறை.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 லிட்டர் பால் மற்றும் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து பறங்கிச்சக்கயை சிறு துண்டுகளாக்கி அதில் போடவும். 4 ல் 3 பங்கு வரை நன்றாக சுண்டி வரும் வரை விட்டு பிறகு அதில் உள்ள பறங்கிச்சக்கையை எடுத்து நன்றாக கழுவி வெயிலில் காய வைக்கவும். மற்ற பொருட்களையும் தனித்தனியாக வெயிலில் காய வைக்கவும்.
பிறகு அனைத்து பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து சலித்துக் கொள்ளவும். இடித்த சலித்த அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து, பிறகு அதனுடன் 160 கிராம் சர்க்கரையையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதை காலை மற்றும் இரவு உணவிற்கு பிறகு 1டம்ளர் தண்ணீரில் 2 கிராம் இந்த பொடியை சேர்த்து கலந்து குடித்து வந்தால் படை, வண்டுகடி, தோல் நோய்கள் குணமாகும். இது இயற்கை வைத்திய முறையாகும்.