Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகள்! இதை மறையச் செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ!

#image_title

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகள்! இதை மறையச் செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ!

பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அதாவது குழந்தை பெற்ற பிறகு அவர்களின் வயிற்றில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகளை மறையச் செய்ய இந்த பதிவில் மூன்று மருத்துவ மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கள்ளப் போகின்றோம்.

குழந்தைகள் பெற்ற. பிறகு வயிற்றில் வரக்கூடிய தழும்பு என்பது அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் ஒன்று தான். அதாவது வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது குழந்தை வேகமாக வளர்வதற்காக பெண்களுக்கு உடல் வேகமாக வளரும். அதே போல குழந்தை பெற்ற பின்பு வேகமாக வளர்ந்த உடலில் இறுக்கத் தன்மைகுறைந்து தோலானது சுருக்கமாகவோ அல்லது தழும்புகளாகவோ மாறும். இதை மறையச் செய்வதற்கு பெண்கள் பலவிதமான வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த பதிவில் பிரசவ காலத்திற்கு பின்னர் ஏற்படும் தழும்புகள் எவ்வாறு மறையச் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

மருத்துவ முறை 1…

பிரசவத்திற்கு பின்னர். பெண்களின் வயிற்றில் ஏற்படும் தழும்புகளை மறைய செய்ய முட்டை மட்டும் போதும். அதாவது முட்டையின் வெள்ளைக் கரு மட்டுமே போதுமானது. வேறு எந்த ஒரு மருத்தும் தேவையில்லை.

முதலில் இளஞ்சூடான வெந்நீர் கொண்டு வயிற்றை சுத்தமாக துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் எடுத்து நன்கு அடித்து பின்னர் அதை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் இதை இளஞ்சூடான தண்ணீரைக் கொண்டு கழுவி விடலாம். இதை தொடர்ந்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் பிரசவ தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்கும்.

மருத்துவ முறை 2…

பிரசவத்திற்கு பிறகு பெண்களின் வயிற்றில் ஏற்படும் தழும்பை மறையச் செய்வதற்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல் மட்டும் எடுத்து வயிற்றில் உள்ள தழும்புகள் மீது தேய்த்து வந்தால் பிரசவ தழும்புகள் அப்படியே மறையத் தொடங்கும்.

மருத்துவ முறை 3…

பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தழும்புகளை மறையச் செய்ய சுத்தமான மலைத் தேனை பயன்படுத்தலாம். சுத்ததமான மலைத் தேனை எடுத்து வயிற்றில் தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து தேன் நன்கு காய்ந்த பின்னர் இளஞ்சூடான தண்ணீரால் கழுவி வந்தால் தழும்புகள் மறையும்.

Exit mobile version